உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்மாவின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய வரலட்சுமி

அம்மாவின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய வரலட்சுமி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியின் அம்மா சாயா தேவி. பல வருடங்களுக்கு முன்பு இவரை விவகாரத்து செய்துவிட்டார் சரத்குமார். அதற்குப் பிறகு நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தனது அம்மாவை விட்டு அப்பா பிரிந்தாலும் சரத்குமார், ராதிகா குடும்பத்தினருடன் வரலட்சுமி நெருக்கமாகவே இருக்கிறார். நேற்று தனது அம்மா சாயாதேவியின் 60வது பிறந்த தினத்தை நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் கொண்டாடி இருக்கிறார் வரலட்சுமி. தனது தங்கை பூஜாவுடன் சேர்ந்து இந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார் வரலட்சுமி.

இது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து தனது அம்மாவைப் பற்றிய எமோஷனலான பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “60 வருடங்களாக தியாகங்கள், அன்பு, மறக்க முடியாத பயணம், உங்களை நேசிக்கும் குடும்பம், இன்னும் பல இருக்கிறது, லவ் யூ மம்மி, நான் உணர்வதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆனால், நான் எப்போதும் சொல்வேன், நான் யார் என்பதை உருவாக்கியது நீங்கள்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !