இத்தனை வயதில் இவ்வளவு ஃபிட்-ஆ ?
ADDED : 1546 days ago
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் மல்லிகா ஷெராவத். தமிழில் கமல்ஹாசன் நடித்த 'தசாவதாரம்' படத்திலும், சிம்பு நடித்த 'ஒஸ்தி' படத்திலும் நடித்திருக்கிறார். ஹிந்தி, சீன, ஹாலிவட் படங்களில் கூட நடித்திருக்கிறார். நேற்றுமுன்தினம் தன்னுடைய 46வது பிறந்தநாளைக் கொண்டாடினார் மல்லிகா. தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை மகிழ்விக்க சில பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இத்தனை வயதிலும் இவ்வளவு ஃபிட் ஆக இருக்கிறாரே என ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். “பிறந்தநாள் பெண்....ஃபிட் மற்றும் அற்புதம்,” என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளார்.
40 வயதைக் கடந்தாலும் சில நடிகைகள் மட்டுமே தங்களது உடலழகை மிகச் சரியாக பராமரித்து வருகிறார்கள். அவர்களில் மல்லிகாவும் ஒருவர்.