உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போயஸ் கார்டனில் ரூ.31 கோடிக்கு வீடு வாங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

போயஸ் கார்டனில் ரூ.31 கோடிக்கு வீடு வாங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

சென்னை நகரின் மையப்பகுதியில் முக்கியமான பகுதி போயஸ் கார்டன். தேனாம்பேட்டை பகுதிக்கும் கோபாலபுரம் பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி இது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா, நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது பிரம்மாண்ட பங்களாக்கள் அங்கு உள்ளன. மேலும் சில பணக்காரப் பிரபலங்களும் வசிக்கும் பகுதி அது.

அங்கு 31 கோடி ரூபாய் மதிப்பில் டூப்ளக்ஸ் அபார்ட்மெண்ட் ஒன்றை நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட், ஒரு தனி வீடு மற்றும் கேரளா, ஐதராபாத் ஆகிய இடங்களிலும் சொந்த வீடு இருப்பதாகத் தகவல்.

தற்போது வாங்கியுள்ள குடியிருப்பு 14 ஆயிரம் சதுரஅடி கொண்ட சூப்பர் பில்ட்அப் ஏரியாவுடன் 2025ம் வருடம் டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளாதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் 90 சதவீதம் நயன்தாராவும், 10 சதவீதம் விக்னேஷ் சிவனும் உரிமையாளர்களாம். 8 கார்கள் நிறுத்தம் அளவு பார்க்கிங் வசதி கொண்டது என்கிறார்கள்.

நீண்ட நாட்களாகவே போயஸ் கார்டன் பகுதியில் ஒரு வீடு வாங்கியாக வேண்டும் என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதாக கோலிவுட்டில் சொல்லி வந்தார்கள். அது தற்போது நிறைவேறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !