மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1410 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1410 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1410 days ago
புதுமுகங்கள் இணைந்து ஊர்வசி என்ற வெப் தொடரை உருவாக்குகிறார்கள். இந்த இணையத் தொடரை இயக்குபவர் எஸ்.கே.எஸ். கார்த்திக் கண்ணன். இவர் ஏற்கெனவே திடல் படத்தை இயக்கியவர். ஏராளமான குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். நாயகியாக டைட்டில் ரோல் ஏற்று ரேகா நாயர் நடிக்கிறார். நாயகனாக அஸ்வின் ஜெயப்ரகாஷ் நடிக்கிறார்.
அஸ்வினின் நண்பர்களாக கவுதம், வினோத், சைனா ஆகியோர் நடிக்கிறார்கள். கதையில் முக்கியத்துவம் கொண்ட பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்கள் நேத்ரா, ஜெஸிகா நடிக்கிறார்கள். ஆர்ஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கிறது. சேகர் ராம் ஜெரால்டு ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீ சாய் தேவ் இசை அமைக்கிறார்.
தொடர் பற்றி இயக்குனர் கார்த்திக் கண்ணன் கூறியதாவது: கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதை உருவாகியுள்ளது. கேரளாவில் பரவலாக பேசப்பட்டது. இதே போல் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளது. இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது.
தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன. காலம், கலாச்சார மாற்ற ஏற்ப மனிதரிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது. காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கர் தொடங்கி கணவனை விட வயதில் மூத்த பெண் மனைவியாகி இணைவது அதிகரித்து வருகிறது.
26 வயது வாலிபனுக்கும் 36 வயது விவாகரத்தான மென்பொருள் துறைப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உண்மையான காதலைச் சொல்வது தான் ஊர்வசி வெப் சீரிஸ். வயது வித்தியாசம் இருப்பதால் வேறுகாரணங்களால் ஏற்பட்ட காதல் அல்ல இது. நியாயமாகவும் நேர்மையாகவும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவருக்கொருவர் நேசம் காட்டும் காதலாக இது சொல்லப்படுகிறது.
1410 days ago
1410 days ago
1410 days ago