உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை

விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை

பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தை தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தை தயாரிக்கும் தில்ராஜூவே தயாரிக்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் 66வது படத்தில் நாயகியாக நடிக்கப்போவது குறித்து சில நடிககைளின் பெயர்கள் வெளியாகி வந்தநிலையில், தற்போது கியாரா அத்வானி அப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள கியாரா அத்வானி இப்போது விஜய் 66ஆவதுபடம் மூலம் தமிழில் அறிமுகமாகப்போகிறாராம். விரைவில் இதுப்பற்றிய அறிவிப்ப வெளியாகலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !