உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காகப் பெயரை மாற்றிய பிவிஆர்

'ஆர்ஆர்ஆர்' படத்திற்காகப் பெயரை மாற்றிய பிவிஆர்

இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் நிறுவனங்களில் ஒன்று பிவிஆர். இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தம் 850 தியேட்டர்கள் உள்ளன. பிவிஆர் சினிமாஸ் என அழைக்கப்படும் இந்நிறுவனத்தின் தியேட்டர்கள் அடுத்த சில மாதங்களுக்கு 'பிவிஆர்ஆர்ஆர்' என 'ஆர்ஆர்ஆர்' படப் பெயருடன் சேர்த்து மாற்றப்படுகின்றன.

உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்காக ஒரு தியேட்டர் நிறுவனம் தனது பெயரை மாற்றுவது இதுவே முதல் முறை என பிவிஆர் நிறுவனம் இது குறித்து பெருமையாக டுவீட் செய்துள்ளது. இதற்கான லோகேலா அறிமுக விழா இன்று மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஆர்ஆர்ஆர் இயக்குனர் ராஜமௌலி மற்றும் பிவிஆர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படம் பிரம்மாண்ட சரித்திரப் படமாக உருவாகி உள்ளது. 2022ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !