உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் விக்ரமின் மகான் ரிலீஸ் என தகவல்

ஓடிடியில் விக்ரமின் மகான் ரிலீஸ் என தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் ஜகமே தந்திரம். இந்த படத்தை எப்படியாவது தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று தனுஷ் கூறியபோதும் தியேட்டர்களில் 50 சதவிகிதம் மட்டுமே இருக்கைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில் தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தியேட்டர் களில் 100 சதவிகிதம் இருக்கைகள் அனுமதிக்கப்பட்டபோதும் இப்படி ஒரு முன்னணி நடிகரின் படம் ஓடிடியில் வெளியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !