சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறார் ஸ்ருதிஹாசன்?
ADDED : 1435 days ago
ஆச்சார்யா படத்தை அடுத்து லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஹாட்பாதர் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இப்படத்தை மோகன்ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவியின் 154-வது படம் நவம்பரில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. பக்கா கமர்சியல் கதையில் உருவாகும் இப்படத்தில் அல்ட்ரா மாஸ் அவதாரத்தில் தோன்றுகிறார் சிரஞ்சீவி. பாபி இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க தற்போது பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்து விட்ட ஸ்ருதிஹாசன்,சிரஞ்சீவியுடன் ஜோடி சேர ஒத்துக்கொள்வாரா? இல்லை மறுத்து விடுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.