உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீவிர எடை குறைப்பில் நடிகர்

தீவிர எடை குறைப்பில் நடிகர்

கொரோனா 2 வது அலைக்கு பின் தொடர்ந்து 3 படங்களை கொடுத்தவர் அந்த நடிகர். 3 படங்களுமே தோல்வி அடைய கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். கதை தேர்வு முதல் நடிப்பு வரை அவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதனால் சிலகாலம் அமைதியாக இருந்து வந்தார். முதல் வேலையாக உடல் எடையை குறைக்க முடிவு செய்தவர் ஜிம்மே கதியென கிடக்கிறாராம். சினிமாவுக்கு வந்த இந்த 15 ஆண்டுகளில் ஜிம் பக்கம் அதிகம் செல்லாத நடிகர் இப்போது தினமும் செல்கிறாராம். தெலுங்கில் தந்தை வேடத்தில் நடித்ததை தொடர்ந்து அதுமாதிரிய வேடங்களே அதிகம் வருகின்றனவாம். உடல் எடையை குறைக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !