இருளர் இன மக்களுக்காக ரூ.1 கோடி நிதி அளித்த சூர்யா
ADDED : 1434 days ago
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் என்ற படம் நாளை(நவ., 2) ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இப்படம் பழங்குடியின மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்த கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ஜெய்பீம் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கபட்டது. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.