விஜய்யின் அடுத்த படத்தில் சென்டிமென்ட் தூக்கல்?
ADDED : 1451 days ago
விஜய் நடிப்பில் தற்போது உருவாகும் பீஸ்ட் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வந்துவிட்டது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் 'பைரவா', 'சர்கார்' படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் கதை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் கதை உறவுகளின் அவசியத்தை பேசும் கதையாக அதே சமயம் விஜய்யின் வழக்கமான படமாகவும் இருக்கும் என்று வம்சி கூறியுள்ளார். இதன் மூலம் படத்தில் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.