கடைசி நாள் ஷூட்டிங்கில் கண்ணம்மா : வைரலான பேர்வல் வீடியோ
ADDED : 1423 days ago
பாரதி கண்ணம்மா சீரியலுக்கான தனது கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன் கலந்து கொண்டு, கேக் வெட்டி பேர்வெல் கொண்டாடி குழுவினரிடம் இருந்து விடைபெற்று சென்றுள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்ரியன் சீரியலை விட்டு வெளியேறுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்தி வெளியானது. ரோஷ்னி வெளியேறுவது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், அவர் சினிமாவில் நடிக்க போகிறார் என்பதால் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் ரோஷ்னி தனது கடைசி நாளை கேக் வெட்டி பேர்வெல் கொண்டாடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் எமோஷ்னல் ஆகி வருகின்றனர். கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷ்ணியை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாது எனவும் புலம்பி வருகின்றனர்.