மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1415 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1415 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1415 days ago
அஜித் நடித்த உன்னை தேடி என்ற படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றிக் கொடிகட்டு, சந்திரமுகி, திருட்டுப்பயலே உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் பரவலாக நடித்து வந்த மாளவிகா 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த மாளவிகா ஒரு கட்டத்தில் தான் கர்ப்பமானதும் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
தற்போது சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த மாளவிகா மறுபடியும் தான் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இப்போது ஜாகுவார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் கோல்மால் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் மாளவிகா. பொன் குமரன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.
1415 days ago
1415 days ago
1415 days ago