உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரு போஸ்டர் வெளியீடு

‛காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரு போஸ்டர் வெளியீடு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா சமந்தா நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்று(நவ., 15) படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என இரண்டு போஸ்டர்கள் உடன் விஜய் சேதுபதி, சமந்தாவின் கேரக்டரையும் வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி போஸ்டரில் ராம்போ என குறிப்பிட்டு அவரின் பெயருக்கு விரிவாக்கமாக ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊந்திரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். கதீஜா என்ற கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்கிறார். அவருக்கான போஸ்டரும் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !