நிஜ வாழ்வில் இணைந்த ரேஷ்மா - மதன் ஜோடி
ADDED : 1421 days ago
ஜீ டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடர் மூலம் பிரபலமானவர்கள் ரேஷ்மாவும், மதன் பாண்டினும். இந்த ஜோடி தற்போது அபி டெய்லர் என்ற தொடரில் நடித்து வருகிறார்கள். புகழ்பெற்ற சீரியல் ஜோடிகள் நிஜத்திலும் காதலிப்பது புதிய விஷயம் அல்ல. அந்த வரிசையில் ரேஷ்மாவும், மதன் பாண்டியனும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் இன்று ( நவ., 15ம் தேதி) நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். சின்னத்திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் பலரும் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.