சாதி முத்திரையை தவிர்க்கும் முன்னணி நடிகர்கள்
ADDED : 1420 days ago
தமிழ் சினிமாவில் உள்ள இரு இயக்குனர்கள் ஒடுக்கப்பட்டோரை மையமாக வைத்தே படங்கள் எடுத்து வருகிறார்கள். இவர்களின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரு படங்களும் ஹிட் அடித்ததால் இருவரது படங்களுக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரு நடிகர்களிடம் இவர்களது இயக்கத்தில் நடிக்கலாமே என்று கதை கேட்கும் சோர்ஸ்கள் கேட்க இருவருமே மறுத்திருக்கிறார்கள். சாதி முத்திரை எனக்கோ, என் படங்களுக்கோ விழுந்து விடக் கூடாது என்று சொல்லி விட்டார்களாம். இந்த விஷயத்தில் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை குறித்து இரு தரப்பினரும் சிலாகிக்கின்றனர்.