சுப்ரமணிய சாமியை சந்தித்த ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ்
ADDED : 1417 days ago
தனுஷ் நடித்த 3 மற்றும் கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். இவர் நவம்பர் 16ம் தேதியான நேற்றைய தினம் பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சாமியை டில்லியில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டபோதும் இதுகுறித்த எந்த புகைப்படத்தையும் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிடவில்லை. ஆனால் சுப்ரமணியசாமி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.