உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதியை இயக்கும் வினோத்

விஜய் சேதுபதியை இயக்கும் வினோத்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கியவர் வினோத். தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி உள்ளார். மீண்டும் அஜித்துடன் ஒரு படம் பண்ண உள்ளார். இதுப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் நடிக்கும் 61வது படத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதியை வைத்து அவர் ஒரு படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது சம்பந்தமாக விஜய் சேதுபதியை சந்தித்து கதை சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !