உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா

தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா

தனுஷ் நடிப்பில் தற்போது ‛கர' என்ற படம் உருவாகி உள்ளது. இதை விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிக்கிறார். இப்பட அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆனது. முதலில் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிப்பதாக இருந்தது. பின்னர் அந்த நிறுவனம் விலக தனுஷே தயாரிக்க முன் வந்தார்.

தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிந்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவர துவங்கி உள்ளது. நேற்றுமுன்தினம் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிவிக்கப்பட்டார். இன்று (ஜன., 31) படத்தின் நாயகி பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியான ‛பராசக்தி' படம் மூலம் அறிமுகமானார். அடுத்தப்படியாக தற்போது தனுஷ் பட வாய்ப்பை பெற்றுள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வருகிறார். அஜித்தின் 64வது படத்திலும் இவர் நடிப்பதாக சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !