உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர்

அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர்

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை அடுத்து தனது புதிய படத்தை அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வருகிறார் அட்லி. இப்படத்தில் அவருடன் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர் ஆகியோர் பங்கேற்று நடித்து வருகிறார்கள். பிப்ரவரி மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பில் ஜான்விகபூரும் கலந்து கொள்ளப் போகிறார். மேலும், தெலுங்கில் ராம்சரணுடன் பெத்தி என்ற படத்தில் நடிக்கும் ஜான்வி கபூர், விரைவில் அல்லு அர்ஜுன் படத்தில் நடிப்பவர், இந்த படத்தை முடிந்ததும் ஜூனியர் என்டிஆருடன் தேவரா 2 படத்தில் நடிக்கப் போகிறார். அந்த வகையில் தெலுங்கில் 2026ம் ஆண்டில் மூன்று படங்களில் நடிக்கிறார் ஜான்வி கபூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !