ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம்
ADDED : 33 minutes ago
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 46வது படத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த படத்தில் கஜினி படத்தில் வரும் சஞ்சய் ராமசாமி போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. 45 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. அதோடு ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்கள் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தபடத்தை ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள கருப்பு படம், 2026 மார்ச் 19ல் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.