உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு

2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்திய சினிமாவில் தற்போது மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் வாரணாசி. ‛ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கும் படம். மகேஷ் பாபு - எஸ். எஸ். ராஜமவுலி கூட்டணியின் முதல் படமாக “வாரணாசி” உருவாகி வருகிறது.

ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோவிங் பிசினஸ் நிறுவனங்களின் சார்பில் நாராயணா மற்றும் கார்த்திகேயா இணைந்து தயாரிக்கின்றனர். பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எஸ். எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு உள்ளிட்ட முழு படக்குழுவும், கண்கவர் புதிய போஸ்டருடன் இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதன்படி, 'வாரணாசி' திரைப்படம் 2027 ஏப்ரல் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !