ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா?
ADDED : 30 minutes ago
நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதை அடுத்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 173-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான அவுட்பிட் என்ற படத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட இருப்பதாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இது குறித்து அப்பட வட்டாரங்களில் விசாரித்தபோது, ரஜினி 173-வது படம் திரில்லர் கலந்த குடும்ப கதையில் உருவாகிறது. எந்த படத்தையும் தழுவி உருவாகவில்லை. என்றாலும் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்தே சோசியல் மீடியாவில் யூகத்தின் அடிப்படையில் இது போன்ற செய்திகளை ரசிகர்கள் வெளியிட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.