உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர்

பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர்

கேம் சேஞ்சர் படத்தை அடுத்து ராம் சரண் நடித்துள்ள படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கியுள்ள இதில் அவருடன் ஜான்விகபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட ராஷ்மிகாவை படக்குழு அணுகியபோது அவர் மறுத்து விடவே, இப்போது மிருணாள் தாக்கூர் அந்த பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிங்கிள் பாடலுக்கு அவர் நடனமாடுவது இதுவே முதல் முறையாகும். மேலும், தற்போது ஹிந்தியில் நான்கு படங்களில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தெலுங்கில் அட்லி - அல்லு அர்ஜுன் இணைந்துள்ள படத்திலும் நடித்து வருகிறார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !