உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது

கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் 'கேரளா ஸ்டோரி. இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. சில மாநிலங்களில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளித்தார்கள். சில மாநிலங்களில் தடை செய்தார்கள். கேரள மாநில இளம் பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்கான அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளாக மாற்றுவதாக அந்தப் படத்தின் கதை இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது வெளிவர இருக்கிறது. விபுல் அம்ருத்லால் ஷா இயக்கி உள்ளார். மூன்று புதிய முகங்களான உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்

'தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்' திரைப்படத்தின் டீசரை அதன் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் “நம் மகள்கள் காதலில் விழுவதில்லை, அவர்கள் பொறிகளில் விழுகிறார்கள். இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்... போராடுவோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு லட்சியதுடன் வாழ்ந்த மூன்று இந்து பெண்கள் தங்களை காதலில் விழவைத்து இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டதாகவும் தங்கள் கனவுகள் பறிக்கப்பட்டு விட்டதாகவும் அந்த டீசரில் தெரிவிக்கிறார்கள்.

தமிழில் மோகன் ஜி இயக்கிய 'திரௌபதி' படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்த ஆண்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்து பெண்களை நாடக காதல் செய்து ஏமாற்றுவது போன்ற கதை அமைப்பு இருந்தது. அதேபோன்றுதான் இந்த படத்தில் இஸ்லாமியர்கள் இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இஸ்லாமியர்களாக மாற்றுவது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

படம் வருகிற பிப்ரவரி 27ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !