உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் கடந்து தெலுங்கிலும் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் இவருக்கு தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‛ஓ சுகுமாரி' உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடிக்கிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் ஆரம்பத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், ‛‛இளம் வயதில் என் சகோதரர் உடன் ஒரு ஆடிஷனுக்கு சென்றேன். அங்கிருந்த போட்டோகிராபர் என் சகோதரரை வெளியில் அமர வைத்து என்னை உள்ளே அழைத்தார். என்னிடம் ஒரு பிகினி உடையை கொடுத்து, இதை அணிந்து வா உன் உடலை பார்க்க வேண்டும் என்றார். அந்தசமயம் எனக்கு சினிமா புரிதல் இல்லை. நானும் ஓரளவுக்கு சமாதானம் ஆனேன். பிறகு என் சகோதரரிடம் கேட்டு வருகிறேன் என கூறி வெளியேறினேன். இன்னும் ஓரிரு நிமிடங்கள் உள்ளே இருந்திருந்தால் நானும் அதை செய்திருப்பேன். எத்தனை பெண்களை இப்படி அந்த போட்டோகிராபர் செய்திருப்பான் என்ற கோபம் வந்தது. அந்த விஷயத்தை அப்போது என் சகோதரரிடம் சொல்ல தைரியம் வரவில்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !