உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து?

'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து?

வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது. தனி நீதிபதி முன்பாக வழக்கு மீண்டும் எப்போது விசாரணைக்கு வரும் என காத்திருக்கின்றனர்.

இதனிடையே, ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு விஜய் பேட்டியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் தாமதம் குறித்த கேள்விக்கு விஜய் பதிலளிக்கையில் தன்னுடைய அரசியல் நுழைவு காரணமாக படம் சிக்கலை சந்திப்பதாகவும், தயாரிப்பாளருக்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளாராம். இப்படி ஒன்று நடக்கும் என்று யூகித்து தாம் ஏற்கெனேவ மனரீதியாக தயாராக இருந்ததாகவும் கூறினாராம்.

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெறும் எண்ணத்தில் உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் தனி நீதிபதி முன்பு வழக்கு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. அதே சமயம், தணிக்கை வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், என்ன நடக்கும் என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !