உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ்

தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ்

மாருதி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 9ம் தேதி வெளியான பான் இந்தியா தெலுங்குப் படம் 'தி ராஜா சாப்'. இப்படம் 200 கோடிக்கு அதிகமாக வசூலித்தாலும் வியாபார ரீதியாக தோல்வியைத் தழுவியதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பட்ஜெட்டில் பாதி மட்டுமே தியேட்டர் வசூலில் வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இந்நிலையில் படம் வெளியான நான்கு வாரங்களில் பிப்ரவரி 6ம் தேதி ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட உள்ளார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொதுவாக, பான் இந்தியா படங்களை 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவார்கள். ஆனால், 'தி ராஜா சாப்' படத்தை 4 வாரங்களில் வெளியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !