உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து

நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து

2025ம் ஆண்டு வெளிவந்த படங்களில் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய அந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். சுமார் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரான படம் 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

அதற்கடுத்து படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் வேறு படம் இயக்காமல் கதாநாயகனாக நடிக்க வந்துவிட்டார். அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'வித் லவ்' படம் அடுத்த வாரம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் மதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதையடுத்து 'டூரிஸ்ட் பேமிலி' நாயகி சிம்ரன், அபிஷன் ஜீவிந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து, “கேமராவுக்குப் பின்னால் இருந்து வழி நடத்துவதில் இருந்து, கேமராவுக்கு முன்னால் திரையில் ஜொலிப்பது வரை இந்தப் புதிய அடியை நீங்கள் எடுத்து வைப்பதைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அபிஷன் ஜீவிந்த். உங்களுக்கும், மொத்த படக்குழுவினருக்கும் 'வித் லவ்' படத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள். விரைவில் தியேட்டர்களில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !