நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவு
நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர்(61) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்.என்.ஆர்.மனோகர், ‛‛மைந்தன், கோலங்கள் உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ளார். அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு இவர் தான் வசனம் எழுதினார். மாசிலாமணி, வேலூர் மாவட்டம் படங்களை இயக்கிய இவர், ‛‛தென்னவன், சபரி, சலீம், வீரம், என்னை அறிந்தால், ஈட்டி, மிருதன், ஆண்டன் கட்டளை, கவண், விஸ்வாசம், காப்பான், டெடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் கடந்த 20 நாட்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் தொற்று சரியான நிலையில் மாரடைப்பால் இன்று(நவ., 17) அவரது உயிர் பிரிந்தது. மனோகர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.