உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்வான்ஸ் கேட்டு நச்சரிப்பு: பாலிவுட்டுக்கு 'ஜூட்' விட்ட நடிகர்

அட்வான்ஸ் கேட்டு நச்சரிப்பு: பாலிவுட்டுக்கு 'ஜூட்' விட்ட நடிகர்


சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து, 'அட்வான்ஸ்' கொடுத்தால் அதன் பிறகு அந்த படம் நிறுத்தப்பட்டாலும் கொடுத்த, 'அட்வான்ஸை' திரும்ப வாங்கும் பழக்கமில்லை. ஆனால், ரன் நடிகரை, இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்துவிட்டு அந்த படங்களை கிடப்பில் போட்டவர்கள் இப்போது கொடுத்த, 'அட்வான்ஸை' கேட்டு நச்சரிக்கின்றனர். இதனால், கடுப்பான நடிகர், 'உங்களுக்கு நான் கொடுத்த, 'கால்ஷீட்' தேதியை வீணடித்து விட்டு, 'அட்வான்ஸை' திருப்பிக் கேட்பதா?' என்று கேட்டு, இனிமேல் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட்டுக்கு சென்று விட்டார், ரன் நடிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !