உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்ஆர்ஆர் - 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டம்?

ஆர்ஆர்ஆர் - 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டம்?

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி' படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தை மிக அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.

உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட பேசி வருகிறார்களாம்.

சுதந்திர போராட்ட காலத்து பீரியட் பிலிம் என்பதாலும் ஆங்கிலேயே நடிகை ஒலிவியா மோரிஸ் ஒரு கதாநாயகியாக நடிப்பதாலும் உலக அளவில் வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது. ஹிந்தியில் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆலியா பட்டைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள். கூடவே அஜய் தேவகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுவரையில் எந்த ஒரு இந்திய சினிமாவும் இப்படி வெளியானதில்லை என்று சொல்லுமளவிற்கு படத்தின் வெளியீடு இருக்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !