புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?
ADDED : 2 days ago
இயக்குனர் சுந்தர்.சி, நடிகர் விஷால் கூட்டணி மதகஜ ராஜா, ஆம்பள, ஆக் ஷன் ஆகிய படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக 'புருஷன்' படத்திற்காக இணைகின்றனர். இதில் விஷால் உடன் இணைந்து தமன்னா, யோகி பாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பை முதலில் பிப்ரவரி 2ம் தேதியன்று தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் படப்பிடிப்பை வருகின்ற பிப்ரவரி 23ம் தேதியன்று துவங்க முடிவு செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.