உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பண மோசடி : நடிகை சினேகா போலீசில் புகார்

பண மோசடி : நடிகை சினேகா போலீசில் புகார்

நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா இருவரும் சென்னையிலுள்ள பனையூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி ஆகியோர் மூலம் எம்.எஸ்.கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமென்ட் கம்பெனியில் ரூபாய் 26 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் சினேகா. இது காரணமாக மாதந்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அவர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களின் அந்த வார்த்தையை நம்பி ஆன்லைன் மூலமாக ரூ. 25 லட்சம் ரூபாயும், ரொக்கமாக ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்திருக்கிறார் சினேகா.

ஆனால் முதலீடு செய்த மே மாதத்தில் இருந்து இப்போது வரை மாதந்தோறும் வரும் தொகையை தராமல் அவர்கள் ஏமாற்றி வருவதாகவும், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுப்பதாகவும் கானத்தூர் காவல் நிலையத்தில் சினேகா புகார் அளித்திருக்கிறார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !