உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாற்றம் வரும் : நாகார்ஜூனா நம்பிக்கை

மாற்றம் வரும் : நாகார்ஜூனா நம்பிக்கை

நாகார்ஜுனா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடித்த சோக்காடே சின்னி நாயனா படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ள படம் பங்காராஜு. இந்த படத்தில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் உப்பென்னா புகழ் கிரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர். கல்யாண் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை நாகார்ஜூனாவே தயாரித்துள்ளார் என்பதால் வரும் சங்கராந்தி பண்டிகை அன்று இந்த படத்தை வெளியிட விரும்புகிறார். ஆனால் அந்த சமயத்தில் ஆர்ஆர்ஆர் மற்றும் ராதே ஷ்யாம் என இரண்டு பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல பவன்கல்யாண், ராணா இணைந்து நடித்துள்ள பீம்லா நாயக் படமும் இப்போது வரை சங்கராந்தி பண்டிகை ரேஸில் கலந்து கொள்வதற்கு தயாராக இருக்கிறது.

ஆனால் பீம்லா நாயக் படம் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.. நாகார்ஜுனாவும் அதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். அப்படி ஒருவேளை இந்தப் படம் தனது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டால் அதற்கு பதிலாக அதே சங்கராந்தி பண்டிகையில் தனது பங்காராஜு படத்தை திரையிடுவதில் உறுதியாக இருக்கிறாராம் நாகார்ஜுனா. அதனால் தனது படமும் ஜன-15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவலை கசிய விட்டுள்ளார் நாகார்ஜுனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !