மேலும் செய்திகள்
இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி'
1386 days ago
செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ்
1386 days ago
நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது
1386 days ago
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன் , மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலர் நடித்துள்ள சரித்திர படம் மரக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். இந்த படம் வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தமிழில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்ய உள்ளார்.
அதில், வரலாற்று சிறப்புமிக்க மரக்காயர் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ''சிறைச்சாலை படம் மூலம் உருவான பிரம்மாண்ட கூட்டணி, 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்,'' எனக் கூறியுள்ளார் தாணு.
இதற்கு முன் மோகன்லால், பிரபு நடித்த 'சிறைச்சாலை' படத்தை தாணு வெளியிட்டார். தற்போது 25 ஆண்டுகளுக்கு பின், மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை வெளியிடுகிறார்.
1386 days ago
1386 days ago
1386 days ago