சரக்கு, நான் வெஜ் - ஓபனாகப் பேசிய சிம்பு
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படம் வரும் 25ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் தி லூப் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். தெலுங்கு படத்திற்கான பிரமோஷனுக்காக சிம்பு ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு பத்திரிகையாளர்களிடம் மனம் விட்டுப் பேசியுள்ளார்.
அப்போது, “எனது திரையுலகப் பயணம் ஒரு தடுமாற்றத்தில் இருந்த போது மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். கடினமாக உழைத்து என்னுடைய பழைய நிலையை மீண்டும் மீட்டெடுத்தேன். குடிப்பதையும், நான் வெஜ் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டேன். அதன் காரணமாக 27 கிலோ வரை குறைந்தேன். கடந்த மூன்று வருடங்களாக இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்தேன். மாநாடு விழாவில் பேசிய போது கடந்த சில வருடங்களாக நடந்த சம்பவங்கள் கண் முன்னாடி வந்து போயின. அதனால் தான் அன்றைய நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டேன்,” எனக் கூறினார்.
சிம்புவின் புதிய தோற்றம் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் எப்படி இருந்தாரா அப்படி இருக்கிறார் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.