மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1409 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1409 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1409 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங்கின் கைவசம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது வருங்கால கணவர் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி என்பதை கடந்த தனது அக்டோபர் 10-ந்தேதி தனது பிறந்த நாளின்போது உலகிற்கு தெரிவித்தார். இந்நிலையில் அடுத்த ஆண்டு கோடையில் காதலரை திருமணம் செய்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
அது குறித்து ரகுல் ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி நினைத்து பார்க்கக் கூட எனக்கு நேரமில்லை. அந்த அளவுக்கு சினிமாவில் ரொம்ப பிசியாக நடித்து வருகிறேன். இருப்பினும் எதிர்காலத்தில் நான் எப்போது திருமணத்திற்கு தயாரானாலும் அதுகுறித்த தகவலை வெளியிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்திய பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
1409 days ago
1409 days ago
1409 days ago