குடியரசு தினத்தில் வெளியாகும் விஷாலின் “வீரமே வாகை சூடும்”
ADDED : 1412 days ago
அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் “வீரமே வாகை சூடும்“. நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்என்ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையாக அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்து ரிலீஸ் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வருகிற ஜன., 26ம் தேதி, குடியரசு தினத்தில் தியேட்டர்களில் படத்தை வெளியிட போவதாக அறிவித்துள்ளனர்.