உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திபேமிலி மேன் 2 கூட்டணியில் மீண்டும் இணையும் சமந்தா?

திபேமிலி மேன் 2 கூட்டணியில் மீண்டும் இணையும் சமந்தா?

டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் சமந்தா நடித்து ஓடிடி தளத்தில் வெளியான தி பேமிலிமேன் 2 தொடர் பரபரப்பை உருவாக்கியது. இந்த தொடர் மூலம் தான் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார் சமந்தா. இவர் நடித்த கதாபாத்திரம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு பாலிவுட்டில் அவருக்கு நல்லதொரு என்ட்ரியை உருவாக்கிக் கொடுத்தது. இந்த நிலையில் மீண்டும் ராஜ் - டிகே இயக்கும் ஒரு வெப்தொடரில் சமந்தா நடிக்க கமிட்டாகியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. திபேமிலிமேன் 2 தொடரைப் போலவே இந்த புதிய தொடரிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் சமந்தா நடிப்பதோடு இந்த தொடர் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !