உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் அட்ராங்கிரே டிரைலர் நாளை வெளியாகிறது

தனுஷின் அட்ராங்கிரே டிரைலர் நாளை வெளியாகிறது

மாறன், திருச்சிற்றம்பலம் படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கிறார் தனுஷ். அதோடு, தி கிரேமேன் ஹாலிவுட் படம் மற்றும் ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடித்துள்ள அட்ராங்கி ரே ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதில், அட்ராங்கி ரே படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 24-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அப்படத்தின் டிரைலர் நாளை(நவ., 24) வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் தனுசுடன் அக்சய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் முக்கியமாக நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !