ஆர்ஆர்ஆர் டிரைலர் எப்போது? - நவ.,26ல் அடுத்த பாடல்
ADDED : 1414 days ago
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன் நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள மெகா படமான ஆர்ஆர்ஆர் வருகிற ஜனவரி 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் பிரமோசன் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் போஸ்டர்கள் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடியாக டிரைலர் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் பட டிரைலரின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், டிசம்பர் 4-ந்தேதி வெளியிட ராஜமவுலி திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து உயிரே என்ற மற்றுமொரு பாடலை நவ.,26ல் வெளியிட போவதாக அறிவித்துள்ளனர். மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்த பாடல் உருவாகி உள்ளது.