மேலும் செய்திகள்
'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்
1381 days ago
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
1381 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
1381 days ago
தமிழில் ஜுலைக்காற்றில் போன்ற ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் அதிக கவனம் பெறாமல் போனவர் தான் மலையாள நடிகை சம்யுக்தா மேனன்.. அதேசமயம் மலையாளத்தில் தீவண்டி என்கிற படத்தில் டொவினோ தாமஸுக்கு காதலியாக நடித்த அவர், 'கால்கி' (காக்கி) என்கிற படத்தில் அவருக்கே வில்லியாக நடித்து மிரட்டினார். தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சம்யுக்தா மேனன்.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா மேனன், தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களில் எல்லாம் பார்ப்பதற்கு சமந்தா போலவே தோற்றமளிக்கிறார். சமந்தா மாதிரியே இருக்கிறாரா இல்லை, சமந்தா மாதிரி தெரிவதற்கு முயற்சிக்கிறாரா என சமந்தாவுடன் இவரை ஒப்பிட்டு ரசிகர்களும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
1381 days ago
1381 days ago
1381 days ago