மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1381 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1381 days ago
யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் பன்னிக்குட்டி. அனுசரண் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. யோகி பாபுவுடன் கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை உள்பட பலர் நடித்துள்ளனர். கே இசையமைத்துள்ளார், சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார்.
தற்போது இந்த படம் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. 11.11 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் பிரபு திலக் வெளியிடுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எங்கள் தயாரிப்பு நிறுவனம் பன்னிக்குட்டி படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்காக லைகா நிறுவனத்துடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம். என்றார்.
1381 days ago
1381 days ago