உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாநாடு - இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூல்

மாநாடு - இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூல்

வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான படம் 'மாநாடு'. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 'டைம் லூப்' படமாக விறுவிறுப்பாக படத்தைக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாகவே அமைந்துள்ளது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்துள்ள இப்படத்தின் இரண்டு நாள் வசூல் 14 கோடி ரூபாய் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இல்லையென்றால் இன்னும் அதிகமான வசூல் கிடைத்திருக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

இப்படத்திற்கான தெலுங்கு, ஹிந்தி ரீமேக் உரிமைகளை வாங்கவும் பலர் போட்டி போட்டு வருகிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !