மகள் நைனிகாவுடன் மீனா நடத்திய கியூட் போட்டோ ஷூட்
ADDED : 1457 days ago
திருமணத்திற்கு பிறகு மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படத்திற்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ள மீனா, தற்போது அண்ணாத்த படத்தை அடுத்து ரவுடி பேபி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருந்து வரும் மீனா, தற்போது தெறி படத்தில் விஜய்யுடன் நடித்த தனது மகள் நைனிகாவுடன் ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், புடவையில் மீனா போஸ் கொடுக்க, அவரது மகள் நைனிகாவோ பட்டு பாவாடை சட்டை அணிந்து கியூட்டாக போஸ் கொடுக்கிறார். அதோடு மீனாவின் தோளை தாண்டியும் வளர்ந்து நிற்கிறார் நைனிகா.