உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி!

ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி!


ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி வெளியான ‛காந்தாரா சாப்ட்டர்-1' படம் 125 கோடி பட்ஜெட்டில் உருவாகி 850 கோடி வரை வசூலித்தது. அதையடுத்து தற்போது தெலுங்கில் தயாராகி வரும் ஜெய் ஹனுமன் என்ற படத்தில் அனுமன் வேடத்தில் நடித்து வருகிறார் ரிஷப் ஷெட்டி. இது குறித்த போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்குவதற்கு தற்போது அவர் தயாராகி வருகிறார். இந்த படத்தையும் காந்தாரா சாப்டர்-1 படத்தைப் போலவே கிராமிய சூழல் கொண்ட பிரம்மாண்ட கதையில் இயக்கப் போகிறார் ரிஷப் ஷெட்டி. அதன் பிறகு மீண்டும் காந்தாரா சாப்ட்டர்-2 படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !