உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல்

10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல்


திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே நடித்து முடித்து இருந்த ‛ரிவால்வர் ரீட்டா' என்ற படம் வருகிற 28ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுனில், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜே.கே.சந்துரு இப்படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ‛கன்னிவெடி, ரவுடி ஜனார்த்தன்' போன்ற படங்களும் வெளிவர உள்ளன.

இந்நிலையில் தற்போது ரீவால்வர் ரீட்டா படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‛‛முன்பெல்லாம் உடல் பெருத்து இருந்தேன். காரணம் சாப்பாடு விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவில்லை. ஆனால், கடந்த ஓராண்டில் தீவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க தொடங்கினேன். அதனால் தற்போது நான் 10 கிலோ வெயிட் குறைந்து இருக்கிறேன். என்னை பொருத்தவரை உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன். அதற்காக யோகா பயிற்சியை தொடர்ந்து வருகிறேன். இதனால் என் உடலும், மனதும் ஆரோக்கியமாக உள்ளது'' என்கிறார் கீர்த்தி சுரேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !