உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி

காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி


ஹிந்தியில் தனுஷ் நடித்து ஆனந்த் எல் ராய் இயக்கிய ‛ராஞ்சனா' படத்தில் காதல் தோல்வி அடைந்த ஹீரோவாக நடித்திருந்தார் தனுஷ். அதன்பிறகு சில ஹிந்தி படங்களில் நடித்திருந்தார். தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‛தேரே இஷ்க் மெயின்' படம் நவ.,28ல் ரிலீசாகிறது. கிர்த்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திலும் காதல் தோல்வியடைந்தவராக நடித்திருக்கிறார் தனுஷ்.

இதுப்பற்றி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு தனுஷ் பதிலளிக்கையில், ‛‛எனக்கு ஏன் இதுபோன்ற (காதல் தோல்வி) கேரக்டர்களை கொடுக்கிறீர்கள் என இயக்குனரிடம் கேட்டேன். அதற்கு, உங்களை பார்க்கும்போது மிகப்பெரிய காதல் தோல்வி கொண்ட மனிதனின் முகச்சாயல் உள்ளது என கூறினார். உடனே நான் கண்ணாடியில் என் முகத்தை பார்த்து அப்படி என்ன தெரியுது என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அவர்களின் கருத்தை நான் பாராட்டாகவும், பாசிட்டிவாகவும் மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !