மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா!
ADDED : 1 minutes ago
நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு இயக்குனராக தெலுங்கு சினிமாவிற்கு மீண்டும் செல்கிறார். ஒரு பக்காவான கமர்ஷியல் பட கதையை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ‛கண்ணப்பா' படத்தின் மூலம் பிரபலமான விஷ்ணு மஞ்சு நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.